சுடச்சுட

    

    "சட்டப்போராட்டம் நடத்தி காவிரி நீரை பெற்றுத் தந்தவர் முதல்வர் ஜெயலலிதா

    By DIN  |   Published on : 18th September 2016 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தந்தவர் முதல்வர் ஜெயலலிதா என மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன் கூறினார்.
    மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு அருகேயுள்ள திருவாளப்புத்தூரில் அதிமுக சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன் பேசியது:
    முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து அதைச் செயல்படுத்தி வருகிறார். காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
    எனவே, வரும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துக்கூறி, அதிமுக வேட்பாளர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெறச் செய்ய கட்சியினர் பாடுபட வேண்டும் என்றார். மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலரும், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினருமான வீ. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
    ஒன்றியச் செயலர் (மயிலாடுதுறை தெற்கு) பா. சந்தோஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வி. பழனிசாமி, மாவட்ட பிரதிநிதி டி. கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சரளா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சியின் மாவட்டப் பொருளாளர் வா. செல்லையன், தலைமை நிலையப் பேச்சாளர் எம். ஜெகன்நாதன், ஒன்றிய அவைத் தலைவர் கே.பி. கணேசன், துணைச் செயலர் செந்தில்குமார், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் பாபு ஆகியோர் பேசினர்.
    கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வி. பொன்னையன் வரவேற்றார். வரதம்பட்டு ஊராட்சி செயலர் காந்திமதிநாதன் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai