சுடச்சுட

  

  நீடாமங்கலத்தில் தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்க (ஏ.ஐ.டி.யு.சி) அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, திருவாரூர் மாவட்ட சிறப்பு கவன ஈர்ப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு சங்க நிர்வாகி கே.பெத்தபெருமாள் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.சாந்தகுமார், மாவட்டச் செயலாளர் ஏ.தங்கவேல், சங்கப் பொருளாளர் வீ.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் சி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார்.
  கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. சங்க திருவாரூர் மாவட்டத் தலைவர் எச்.அழகிரி, அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஏ.காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குநர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 2001-ஆம் ஆண்டு அரசு தடை ஆணையை நீக்க வேண்டும். மாத ஊதியத்தை 18,000-ஆக உயர்த்த வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 4.10.2016 அன்று மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய துணைச் செயலாளர் ஏ.ரமேஷ் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai