சுடச்சுட

    

    பொறையாறு அருகே வீட்டிலிருந்த பெண்ணை கடத்திச் சென்றதாக போலீஸில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
    பொறையாறு அருகேயுள்ள திருக்கடையூர், பிச்சைக் கட்டளையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி பூபதி (58). இவரது மகள் சுந்தரி (28). இவருக்கு, மாப்பிள்ளை பார்த்து வந்தனர். மாப்பிள்ளை முடிவானதைத் தொடர்ந்து, நிச்சயம் செய்வதற்காக சுந்தரியின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றனர். பிற்பகல் வாக்கில் வீட்டுக்கு வந்தபோது சுந்தரியைக் காணவில்லையாம். இதுகுறித்து பூபதி அளித்த புகாரில், தன் மகள் சுந்தரியை பாகசாலையைச் சேர்ந்த விஜயகுமார் கடத்திச் சென்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார். புகாரின்பேரில், பொறையாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai