சுடச்சுட

    

    வேளாங்கண்ணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    நீடாமங்கலம் அருகேயுள்ள கமலாபுரம், கருப்பூர், மில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வெங்கடேசன்(38). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர், வெள்ளிக்கிழமை பிற்பகல் நாகையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றார்.
    பேருந்து வேளாங்கண்ணி ஆர்ச் அருகே திரும்பும்போது, எதிரே வந்த கார் பேருந்தின் குறுக்கே வந்துள்ளது. காரை வேளாங்கண்ணி, பூக்காரத் தெருவைச் சேர்ந்த மரியசூசை மகன் ஆல்வின் (23) ஓட்டி வந்தார்.
    இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், வெங்கடேசனை தாக்கிய ஆல்வின், அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.
    இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸார் வழக்குப் பதிந்து ஆல்வினை கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai