சுடச்சுட

  

  வடுவூர் கோதண்டராமர் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் நிறைவு வழிபாடு

  By DIN  |   Published on : 18th September 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன்னார்குடி அருகேயுள்ள வடுவூர் கோதண்டராமர் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் நிறைவு நாளையொட்டி சுவாமிகளுக்கு கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
  இக்கோயிலில் கடந்த 48 நாள்களாக கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சுவாமிகளுக்கு தினமும் மஞ்சல், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் மற்றும் புனிதநீரால் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்று வந்தது.
  இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, நான்கு சுவாமிகளுக்கும் ஆபரங்கள் அணிவித்து, தீபாராதனை நடைபெற்றது. அப்போது, ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் சார்பில் சீதாதேவிக்கு 6 பவுனில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. மேலும், புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சுவாமிகளுக்கு பூர்ண கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  இதற்கான ஏற்பாடுகளை வடுவூர் வேதப்பாடசாலை முதல்வர் கோவிந்தன், தீட்சதர்கள்,கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai