சுடச்சுட

  

  விளந்திடசமுத்திரத்தில் ஊராட்சி கட்டடம், பேருந்து பயணிகள் நிழற்குடை திறப்பு

  By DIN  |   Published on : 18th September 2016 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சீர்காழியை அடுத்த விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் கட்டப்பட்ட ஊராட்சி கட்டடம் மற்றும் பேருந்து பயணிகள் நிழற்குடை ஆகியவை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  சீர்காழி ஒன்றியம், விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் ரூ. 12 லட்சம் செலவில் ஊராட்சி மன்ற கட்டடமும், ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் பேருந்து பயணிகள் நிழற்குடையும் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா மயிலாடுதுறை கோட்டாட்சியர் சுபாநந்தினி தலைமையில் நடைபெற்றது.
  விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, புதிய கட்டடம், நிழற்குடை ஆகியவற்றை திறந்து வைத்து பேசியது:
  முதல்வர் ஜெயலலிதா, பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வரை மருத்துவ செலவு செய்துகொள்ளும் வசதியை முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தித் தந்துள்ளார் என்றார். மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சந்திரசேகரன், துணைத் தலைவர் ஜெயராமன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ம. சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  இதில் ஊராட்சி உறுப்பினர்கள் வசந்தா, மாரியப்பன், காளிமுத்து, காசிராஜன், அசோகன், காமராஜ், சாந்தி, ஊராட்சி செயலர் தியாகராஜன், ஊராட்சி அதிமுக செயலர் அப்துல்சத்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சித் தலைவர் உம்மல்பஜ்ஜிரியா வரவேற்றார். துணைத் தலைவர் கயல்விழி வேணுகோபால் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai