சுடச்சுட

    

    நாகை மாவட்டத்தில் உள்ள அம்மா மருந்தங்கள் மூலம் ரூ. 58.2 லட்சம் மதிப்பில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    நாகை மாவட்டம், மயிலாடுதுறை (கூறைநாடு),  வேதாரண்யம் (தோப்புத்துறை), கீழ்வேளூர் ஆகிய இடங்களில் 2014-ஆம் ஆண்டு டிச. 6-ஆம் தேதி அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டு, 12 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
    இந்த மருந்தகங்களில் இதுவரை ரூ. 58.2 லட்சம் மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai