சுடச்சுட

    

    "கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்துக்காகவே சமுதாய வளைகாப்பு

    By DIN  |   Published on : 19th September 2016 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழை கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியம் பெறவே தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நடத்தப்படுவதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
    வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஒன்றியத்துக்குள்பட்ட 120 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தலைஞாயிறில் நடைபெற்ற விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி தலைமை வகித்தார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விழாவை தொடங்கிவைத்து மேலும் பேசியது:
    முன்னோர்கள் பாரம்பரியமாக நடத்திவரும் சடங்குகளில் அறிவியல் தொடர்புகள் உண்டு. கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவது போன்ற சடங்குகள் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கும், அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. கர்ப்பிணிகளுக்கு போதிய ஊட்டம், ஆரோக்கியம் கிடைக்கவே அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. இதனால், பேருகால மரணங்கள் வெகுவாக குறைந்துள்ளன என்றார்.
    முன்னதாக, கர்ப்பிணிகளுக்கு நடைபெற்ற வினா-விடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.
    நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் வனஜாராணி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.என்.தமிழ்வாணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சண்முகராஜ்,பேரூராட்சித் தலைவர் பத்மாசவுரிராஜன், கூட்டுறவு சங்கத் தலைவர் அவை.பாலசுப்பிரணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    குத்தாலம்... தேரழந்தூர் கம்பர் கோட்டத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், குத்தாலம் ஒன்றியக் குழுத் தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினரும், அதிமுக ஒன்றியச் செயலாளருமான சி.இராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தான்யா வரவேற்றார்.  பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் குத்துவிளக்கேற்றி, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
    பின்னர், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும், குழந்தை வளர்ப்பு பற்றி வினாடி-வினாப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினத்தில்...
    நாகப்பட்டினம், செப். 18: நாகப்பட்டினத்தில் 108 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    நாகை, சாமந்தான்பேட்டை சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவஞானபாரதி தலைமை வகித்தார்.
    நாகை நகர்மன்றத் தலைவர் மஞ்சுளா சந்திரமோகன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஜான்சன், நாகூர் நலமைய மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஏ. ரோஸ்லின் ஜாய்ஸ் கிரேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
    விழாவில், கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலையும், வளையலும் அணிவிக்கப்பட்டு,  5 வகையான கலவை சாதங்களும் வழங்கப்பட்டன. மேலும், மஞ்சள், குங்குமம், வளையல், தாம்பூலத் தட்டுடன் சீதனப் பொருள்களும்
    வழங்கப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai