சுடச்சுட

    

    கோயில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 19th September 2016 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள கோயில் பாதுகாப்புப் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள 54 திருக்கோயில் பாதுகாப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணிக்கு 58 வயதுக்குள்பட்ட, நல்ல திடகாத்திரமான உடல் திறன் கொண்ட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
    தகுதி, விருப்பம் உள்ளவர்கள், தங்கள் பெயரை நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai