Enable Javscript for better performance
சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம் நிறைவு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம் நிறைவு வழிபாடு

    By DIN  |   Published on : 19th September 2016 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி தாடாளன்பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம்  நிறைவு விழாவையொட்டி பெருமாள் கருடவாகனத்தில் வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
    சீர்காழியில் தாடாளன்பெருமாள் என்றழைக்கப்படும் திருவிக்கிரமநாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் பெருமாள் லோகநாயகி தாயாருடன் காட்சி தருகிறார். இங்கு கடந்த திங்கள்கிழமை முதல் வருடாந்திர பவித்ரோத்ஸவம் நடைபெற்று வந்தது.
    விழாவின் நிறைவாக வெள்ளிக்கிழமை உதயகருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, பூர்ணாஹுதி செய்யப்பட்டு, புனிதநீரால் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் கருடவாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பரம்பரை ஆதீன ஸ்தானீகம் குமார சிங்கராச்சாரியார் மேற்பார்வையில், பட்டாச்சாரியார்கள் பத்ரிநாதன், பிரபு ஆகியோர் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai