Enable Javscript for better performance
சுனாமி குடியிருப்புக்கு குடிநீர் கேட்டு சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    சுனாமி குடியிருப்புக்கு குடிநீர் கேட்டு சாலை மறியல்

    By DIN  |   Published on : 19th September 2016 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை அருகே சுனாமி குடியிருப்பு பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதியினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில்
    ஈடுபட்டனர்.
    நாகை, செல்லூர் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுனாமி குடியிருப்பு உள்ளது. இந்தப் பகுதியில் சில மாதங்களாக முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நாகை கிழக்குக் கடற்கரைச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முறையாக தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai