சுடச்சுட

  

  தமிழக அரசின் மகளிருக்கான சிறப்பான திட்டங்களால் பேறுகால இறப்பு வெகுவாக தடுக்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி தெரிவித்தார்.

  சீர்காழியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சி.கார்த்திகா தலைமை வகித்தார். சீர்காழி ஒன்றியக் குழுத் தலைவர் எம்.என்.ஆர்.ரவி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஏ.கே.சந்திரசேகரன், செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  நிகழ்ச்சியில், 160 தாய்மார்களுக்கு வளையல் அணிவித்து சிறப்பு செய்யும் நிகழ்ச்சியை பி.வி.பாரதி எம்.எல்.ஏ தொடங்கி வைத்து பேசும்போது, "பெண் சமுதாயம் உயர்நிலையை அடையவேண்டும் என்ற சிந்தனையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு அதன் அலுவலர்கள், சமுதாயம் ஆகியவை கர்ப்பிணிகளுக்கு உறுதுணையாக இருப்பதை எடுத்துக்காட்டும் விதமாக சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. தமிழக அரசின் பல்வேறு திட்டங்களால் பேறு கால இறப்பு தமிழகத்தில் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது என்றார்.

  தொடர்ந்து, தாய்மார்களுக்கு சத்துமாவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. திருவெண்காடு மருத்துவ அலுவலர் ராஜேஸ் திட்டம் பற்றிய உரையாற்றினார். இதில் அதிமுக ஜெ.பேரவை செயலர் ஏ.வி.மணி, தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட துணை செயலாளர் பரணிதரன், வழக்குரைஞர் தியாகராஜன்,சிவ.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai