சுடச்சுட

  

  மயிலாடுதுறை குருமூர்த்தி நடுநிலைப்பள்ளி இலக்கிய மன்றம் சார்பில் ஆசிரியர்  தின விழா மற்றும் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  விழாவுக்கு பள்ளி முகவர் மு.ஞானவேலன் தலைமை வகித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர் கோ.முருகையன், செயலர் ஞா.மலர்விழி ஆகியோர் முன்னிலை
  வகித்தனர்.
  விழாவில், நல்லாசிரியர் விருது பெற்ற குத்தாலம் அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எம்.சந்திரசேகரன், திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஏ.தமிழ்ச்செல்வன், மயிலாடுதுறை டிஇஎல்சி நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.மார்ட்டின் தம்பையா, மூவலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஜெக.மணிவாசகம் ஆகியோரும், மயிலாடுதுறை லயன்ஸ் சங்கம் மூலம் விருது பெற்ற குருமூர்த்தி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் எம். ராதாகிருஷ்ணன், என்.ரமா ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
  தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் நூலகர்(ஓய்வு) முனைவர் ஆர்.செல்வநாயகம், நல்லாசிரியர் டி.எஸ்.தியாகராஜன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.நடராஜன், கிராமக் கல்விக் குழுத் தலைவர் சுதா வெங்கட்ராமன் ஆகியோர் விருது பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசினர். தலைமையாசிரியர் வளவன் வரவேற்றார். ஆசிரியை  வாணி
  நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai