சுடச்சுட

  

  பள்ளிவாசல், தர்காக்கள் சீரமைப்புக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கியதற்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாகூர் தர்கா ஆலோசனைக் குழுத் தலைவர் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் நன்றி தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
  தேவாலயங்களைப் புணரமைக்க ரூ.1 கோடியும், பள்ளிவாசல், தர்காக்கள் சீரமைக்க ரூ.3 கோடியும் தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி நிதி ஒதுக்கியதற்கு நன்றி. இதன் மூலம் பள்ளிவாசல்கள், தர்காக்கள் நிச்சயம் புதுப்பொலிவு பெறும்.  
  தர்காக்கள் புனரமைப்பு செய்கையில் நாகூரில் உள்ள செய்கு அப்பா சாஹிப் தர்கா, நாகூர்-நாகை மெயின் ரோட்டில் உள்ள எக்தியார்ஷா பாபா தர்கா போன்ற கட்டட அமைப்பு தேவைப்பட கூடிய தர்காக்களுக்கு முன்னுரிமையும்,  மாவட்டம் வாரியாக ஏனைய அனைத்து தர்காக்களுக்கு கோரிக்கையின் அடிப்படையிலும் நிதியை முழுமையாக வக்பு வாரியம் உபயோகிக்க வேண்டும்
  மேலும், ஏற்கனவே கோரியிருந்தபடி நாகூர் தர்கா மற்றும் நாகூர் நகரை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai