சுடச்சுட

  

  நாகை மாவட்டம், பொறையாறு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்,  இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரிய செம்பனார்கோயில் உதவி செயற்பொறியாளர் ஆர்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  பொறையாறு  துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், செவ்வாய்க்கிழமை (செப்.20) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொறையாறு, தரங்கம்பாடி, திருக்கடையூர், ஆயப்பாடி, எடுத்துக்கட்டி சாத்தனூர், சங்கரன்பந்தல், தில்லையாடி, தி.மணல்மேடு, திருவிடைக்கழி, குட்டியாண்டியூர், கண்ணப்பன் மூலை, என்.என்.சாவடி, எருக்கட்டாஞ்சேரி, மாணிக்கப்பங்கு, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், மற்றும் பொறையாறு துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது எனக் கூறியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai