சுடச்சுட

    

    மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள்: ராமநாதபுரம், நாகப்பட்டினம் அணிகள் முதலிடம்

    By DIN  |   Published on : 19th September 2016 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில், ஆண்கள் பிரிவில் ராமநாதபுரம் அணியும், பெண்கள் பிரிவில் நாகப்பட்டினம் அணியும் முதலிடத்தை தக்கவைத்து வெற்றிக் கோப்பையை வென்றன.
    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட கைப்பந்துக் கழகமும், இயற்கை எரிவாயுக் கழகம் காரைக்கால் பிரிவும் இணைந்து, மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிகளை நடத்தின. வியாழக்கிழமை தொடங்கிய இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட ஆண், பெண் அணியினர் கலந்துகொண்டனர்.
       இறுதிப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த நாகப்பட்டினம் அணிக்கு பெரியார் நினைவு பரிசுக் கோப்பை, ரொக்கம் ரூ. 25 ஆயிரம் மற்றும் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இரண்டாம் இடத்தைப் பிடித்த இயற்கை எரிவாயுக் கழக அணிக்கு ரூ. 15 ஆயிரமும், 3 ஆவது இடம் பிடித்த ராமநாதபுரம் அணிக்கு ரூ. 10 ஆயிரமும், 4 ஆவது இடம் பிடித்த
    அரியலூர் அணிக்கு ரூ. 5 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.
       பெண்கள் அணியில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக, நாகப்பட்டினம் அணியைச் சேர்ந்த பூவிகாவுக்கும், இளைய சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இயற்கை எரிவாயுக் கழக அணியின் இலக்கியாவுக்கும், தொழிலதிபர் ரமணா. காந்தி பரிசு வழங்கினார்
      வெற்றி பெற்ற பெண்கள் அணிக்கு பெரியார் நினைவு காவேரி பரிசுக் கோப்பையை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் வழங்கினார்.
      ஆண்கள் அணியில் முதலிடத்தைப் பெற்ற ராமநாதபுரம் அணிக்கு ரொக்கப் பரிசாக ரூ. 30 ஆயிரம், பெரியார் நினைவு பரிசுக் கோப்பை, பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை, இயற்கை எரிவாயுக் கழக காரைக்கால் பிரிவு செயல் இயக்குநர் குல்பீர் சிங் வழங்கினார். 2 ஆவது இடம் பெற்ற திருவாரூர் அணிக்கு ரூ. 20 ஆயிரமும், 3 ஆவது இடம் பிடித்த நாகப்பட்டினம் அணிக்கு ரூ. 10 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.
      ஆண்கள் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக, திருவாரூர் அணியின் தமிழரசனும், இளைய சிறந்த விளையாட்டு வீரராக ராமநாதபுரம் சீனி அப்பாஸ் அலியும் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai