சுடச்சுட

    

    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ. 2.44 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

    By DIN  |   Published on : 19th September 2016 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேளாங்கண்ணி கிறிஸ்துராஜா மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் ரூ. 2,.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சனிக்கிழமை வழங்கினார்.
    நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள கிறிஸ்துராஜா மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி தலைமை வகித்தார்.
    விழாவில்  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று, மாற்றுத்திறனாளி மாணவர்கள் 15 பேருக்கு தலா ரூ.14,990 வீதம் ரூ.2,24,800 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள், செவித்திறன் குறைந்த ஒருவருக்கு ரூ.9000 மதிப்பிலான காது கேட்கும் கருவி, 2 பேருக்கு தலா ரூ.5,350 வீதம் ரூ.10,700 மதிப்பிலான சக்கர நாற்காலிகள் என மொத்தம் ரூ.2,44,550 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    அப்போது அவர் பேசியது: தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தாயின் வயிற்றில் குழந்தை நன்றாக உள்ளதா என்பதை அறியும் ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற ஊனத்தின் சதவீதம் 50-லிருந்து 40 ஆக குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது என்றார்.
    விழாவில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். ஆசைமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், வேளாங்கண்ணி பேராலய பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், கல்விக் குழுத் தலைவர் கிங்ஸ்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai