Enable Javscript for better performance
இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கீழ்வேளூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கீழ்வேளூரில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும்  கீழ்வேளூர் கடைத்தெருவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக வகுப்புகளை புறக்கணித்த மாணவ, மாணவிகள் கல்லூரியிலிருந்து கீழ்வேளூர் கடைத்தெரு வரை பேரணியாகச் சென்றனர்.
    போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலர் மு. ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி. மாரியப்பன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆ. பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai