சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு: திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 20th September 2016 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2016-க்கான வாக்காளர் பட்டியல் நாகையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2016-க்கான நாகை மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்து வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். ஊரக வாழ்வாதார இயக்க மாவட்டத் திட்ட இயக்குநர் மதுமதி பெற்றுக் கொண்டார்.
    இந்தப் பட்டியல்கள், நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இப்பட்டியலில், ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில், தொடர்புடைய பகுதிகளின் வட்டாட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர்களிடம் விண்ணப்பித்துத் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றார் ஆட்சியர் சு. பழனிசாமி.
    மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் செளந்தரராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (சிறுசேமிப்பு) அன்பரசு ஆகியோர் உடனிருந்தனர்.
    வாக்காளர் எண்ணிக்கை..
    இப்பட்டியலில், 434 ஊராட்சிகளை உள்ளடக்கிய 11 ஊராட்சி ஒன்றியங்களின் வாக்காளர்கள் எண்ணிக்கை - 9,68,556. இதில், ஆண்கள் - 4,82,016. பெண்கள்- 4,86,535. மூன்றாம் பாலினத்தவர் - 5.  4 நகராட்சிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை - 2,02,342.  இதில், ஆண்கள் - 98,963. பெண்கள் - 1,03,370. மூன்றாம் பாலினத்தவர் - 9.  8 பேரூராட்சிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை - 75,284. இதில், ஆண்கள் - 36,872. பெண்கள்- 38,412.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai