சுடச்சுட

    

    நாகப்பட்டினம் அருகே கடந்த ஆண்டு காணாமல் போனவரை கொலை செய்தது தொடர்பாக, இரண்டு பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    நாகப்பட்டினம், சுனாமி குடியிருப்பு, ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் சங்கர் (27). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்தியா (25). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆயிருந்தது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன.
    இந்நிலையில், கடந்த ஆண்டு (2015) மே 24 ஆம்  தேதி அந்தனப்பேட்டையிலிருந்து நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலுக்கு காவடிகள் புறப்பட்டுச் சென்றன. அவர்களோடு சங்கரும் புறப்பட்டார். ஆனால் திரும்ப வரவில்லை.
    இதுகுறித்து ஜூன் 12 ஆம் தேதி சங்கரின் மனைவி சத்தியா அளித்த புகாரின் பேரில், நாகை நகரப் போலீஸார் காணமல்போனதாக வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், மேலக்கோட்டைவாசல், நடராசப்பிள்ளை தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் கார்தீசன் (28), அந்தனப்பேட்டை, வெட்டுகுள மேலத்தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சிவா (27) இருவரும் அந்தனப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் ஆர். செல்வம் முன்னிலையில் திங்கள்கிழமை ஆஜராகி, சங்கரை கொலை செய்ததாகக் கூறியுள்ளனர்.
    இதையடுத்து, அவர்கள் நாகை நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் விசாரணையில், கார்தீசன் மனைவி வள்ளியை சங்கர் தவறாகப் படம் பிடித்ததாகவும், அதனால் 7 பேர் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டி, பீர்பாட்டிலால் சங்கரைத் தாக்கி, ஒரு வீட்டின் பின்புறம் புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
    இதையடுத்து நாகை நகரப் போலீஸார் கொலை வழக்காக மாற்றம் செய்து 7 பேர் மீது வழக்குப் பதிந்து கார்தீசன், சிவா இருவரையும் கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai