சுடச்சுட

  

  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்குரிய ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
  மயிலாடுதுறை வட்டம், பூதங்குடி, கடலங்குடி ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணியாற்றியவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம்.
  இந்நிலையில், கடலங்குடியில் ஒன்றிணைந்த பூதங்குடி, கலடங்குடி கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட 150-க்கும்  மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்குரிய ஊதியத் தொகையை வழங்க வேண்டும். ஊராட்சியில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். மண்ணியாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வார வேண்டும். தகுதி வாய்ந்தவர்களுக்கு  முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
  தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசெல்வி மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைச் செயலாளர்கள் வெள்ளிமலை (பூதங்குடி), சுகுமாறன் (கடலங்குடி) ஆகியோர் தலைமை வகித்தனர்.
  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் து. கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஸ்டாலின், வி. சிங்காரவேலு,  வட்டச் செயலர் எம். மணி, வட்டக்குழு உறுப்பினர் சி. மேகநாதன், கடலங்குடி ஊராட்சித் தலைவர் சி. மோகன்குமார், சிபிஐஎம் கிளை நிர்வாகிகள் அறிவழகன், செல்வம், ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai