சுடச்சுட

    

    கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 20th September 2016 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
    இதுகுறித்து நாகை சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ்  தலைவர் எம்.ஆர். சிவசங்கரன், நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமியிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
    திருமருகல் அருகே அருள்மொழிதேவன், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்குவதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்துவிட்டன. ஆனால், இன்னமும் குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. அத்துடன் வராத குடிநீருக்கு ஆலத்தூர் ஊராட்சி நிர்வாகம் பணம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது. மேலும், எங்கள் பகுதியில் கிடைக்கும் தரமற்ற குடிநீரை குடிப்பதால் இப்பகுதி மக்கள் சிறுநீரக பாதிப்பு, தோல் வியாதி போன்ற நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai