Enable Javscript for better performance
"கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இலக்கு ரூ. 63 லட்சம்'- Dinamani

சுடச்சுட

    

    "கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இலக்கு ரூ. 63 லட்சம்'

    By DIN  |   Published on : 20th September 2016 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு நிகழாண்டுக்கான தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இலக்கு ரூ. 63 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் சு. பழனிசாமி கூறினார்.
    நாகை, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை திங்கள்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:
    நாகையை உள்ளடக்கிய கடலூர் மண்டல கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களுக்கு 2016-17-ஆம் ஆண்டுக்கான விற்பனை இலக்கு ரூ. 15 கோடி. இதில், நாகை விற்பனை நிலையத்துக்கான விற்பனை இலக்கு ரூ. 63 லட்சம்.
    தீபாவளியையொட்டி, புதிய ரகங்களாக இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் காட்டன் சேலைகள், நெகமம், கோவை காட்டன் மற்றும் கோரா புடவைகள், சேலம், ஜெயங்கொண்டம் காட்டன் புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    இதைத் தவிர, 100 சதவீத பருத்தி சட்டைகள், லினன் காட்டன் சட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மீரட் போர்வைகள், சுடிதார் மெட்டீரியல்ஸ், ஜமுக்காளம், தலையணை உறைகள், திரைச்சீலைகள், துண்டு ரகங்கள் மற்றும் ரெடிமேட் சட்டைகள், மிதியடிகள், நைட்டீஸ் மற்றும் உள்பாவாடை ரகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக செப். 15-ஆம் தேதி முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வட்டியில்லா சுலப தவணை கடன் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
    வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணையம் மூலம் கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளைத் தேர்வு செய்து, கொள்முதல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்படும் தங்க மழை திட்டம் மூலம், ரூ. 2 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பில் கொள்முதல் (ரொக்கம்) செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் கடலூர் மண்டலத்தில் தலா 4 கிராம் வீதம் 15 பேருக்கு தங்கம் பரிசளிக்கப்படவுள்ளது என்றார்.
    கோ-ஆப்டெக்ஸ் கடலூர் மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் த. ராமலிங்கம், கடலூர் மண்டல மேலாளர் அ. கோபால், மண்டல துணை மேலாளர் க. அருள்ராஜன், ரக மேலாளர் ஆ. சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai