சுடச்சுட

    

    நாகை மாவட்டம், சீர்காழி அருகே வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண் கழுத்து  அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது திங்கள்கிழமை காலை தெரியவந்தது.
    சீர்காழி அருகேயுள்ள தாண்டவன்குளம் எல்லைசந்து தெருவைச் சேர்ந்தவர் அகோரமூர்த்தி. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், தற்போது கேரள மாநிலம், கொச்சி துறைமுகத்தில் படகு கட்டும் பணி செய்து வருகிறார். இவரது மனைவி சீதா (35). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. அகோரமூர்த்தி கொச்சி துறைமுகத்தில் வேலை செய்து வருவதால், சீதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில், திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாகியும் சீதாவின் வீட்டுக் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கம் வீட்டினர், ஜன்னல் வழியாக பார்த்தபோது, சீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுக்கையில் இறந்து
    கிடந்தது தெரியவந்தது.
    இதையடுத்து, புதுப்பட்டினம் காவல்நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து புதுப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai