சுடச்சுட

    

    நாகப்பட்டினம் அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட சொத்துத் தகராறில் தம்பி தாக்கியதில் அண்ணன் இறந்தார்.
    நாகப்பட்டினம் அருகேயுள்ள நம்பியார் நகர், அம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் செளந்தர்ராஜன் மகன் ஆறுமுகம் (40). இவரது தம்பி தங்கசாமி (35). திங்கள்கிழமை இரவு இவர்களுக்குள் சொத்து தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
    தகராறில் கல்லால் ஆறுமுகத்தை தங்கசாமி தாக்கினாராம். காயமடைந்த ஆறுமுகம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆறுமுகம் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai