சுடச்சுட

  

  தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற, மூவலூர் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான பாராட்டு விழா, மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்  மற்றும் மயிலாடுதுறை பொதுத் தொழிலாளர்  சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றியத் தலைவர் வே. கந்தன்  தலைமை வகித்தார். ஆசிரியர் மன்ற நாகை மாவட்டச் செயலர் பா. ரவி, மாவட்டப் பொருளாளர் ம. செந்தில்வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  விழாவில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் க. மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் ஏ. தமிழ்ச்செல்வன், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா எம். முருகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கி. சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், நாகை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பண்ணை டி. சொக்கலிங்கம், பாமக மாநில பொதுச் செயலர் எஸ்.ஏ. அய்யப்பன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் ரெ. இடும்பையன், மயிலாடுதுறை வழக்குரைஞர் சங்கத் தலைவர் வேலு. குபேந்திரன், பாஜக மாவட்டப் பொருளாளர் முத்துக்குமாரசாமி, மயிலாடுதுறை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்  ஏ. நாகராஜன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொன். பூங்குழலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற   ஒன்றியச் செயலர் க. துரை தொடக்கவுரையாற்றினார். ஜெக. மாணிக்கவாசகம் ஏற்புரையாற்றினார்.
  பொது தொழிலாளர் சங்கச் செயலர் அப்பர் சுந்தரம் வரவேற்றார். ஆசிரியர் மன்ற நகரச் செயலர் வை. மணிமாறன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai