சுடச்சுட

  

  நல வாரிய அட்டை, பட்டாக்களை மீட்டுத்தர நரிக்குறவர்கள் கோரிக்கை

  By DIN  |   Published on : 20th September 2016 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனி நபரிடம் உள்ள நலவாரிய அட்டை மற்றும் பட்டாக்களை மீட்டுத் தர வேண்டும் என நரிக்குறவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
  நாகப்பட்டினத்தில் சிவசேனை கட்சியின் மாநில அமைப்பாளர் தங்க. முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நரிக்குறவர்கள், நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். துரை ஆகியோரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
  நாங்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் மயிலாடுதுறையில் உள்ள ஒரு நபரிடம் ஆலோசனைகள் பெற்று வந்தோம். தொடக்கத்தில் நல்ல ஆலோசனைகளை வழங்கி வந்த அவர், பின்னர் தன்னிச்சையாக செயல்பட்டார். நரிக்குறவர் பிள்ளைகளுக்காக உள்ள உண்டு, உறைவிடப் பள்ளியை கேடயமாகப் பயன்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுபற்றி புகார் அளித்தால் எங்களுக்கு நியாயம் மறுக்கப்படுகிறது. ஏப். 4 ஆம் தேதி மயிலாடுதுறை அருகே பல்லவராயன் பேட்டையில் வசிக்கும் கஜேந்திரன் மகன் ராமராஜன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டிருந்த அவர் உண்டு உறைவிடப்பள்ளியை காரணம் காட்டி தப்பித்தார்.
  அவர் எங்களின் அறியாமையை பயன்படுத்தி வாஞ்சூர் அருகே வாகிரியார் காலனியில் வசிக்கும் 21 குடும்பங்கள்,  பல்லவராயன்பேட்டையில் வசிக்கும் 11 குடும்பங்கள் என 32 குடும்பங்களின் நரிக்குறவர் நலவாரிய அட்டை, வீட்டு மனைப்பட்டா ஆகியவற்றை தன்வசம் வைத்துக் கொண்டு, எங்களை ஆட்டி
  வைக்கிறார்.
  எனவே, அவரிடமிருந்து நலவாரிய அட்டை, பட்டாக்களை மீட்டுத் தரவேண்டும் எனக் கோரியுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai