சுடச்சுட

  

  நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், கள்ளச்சாராய எதிர்ப்பு விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
  நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்தார்.
  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்கு தீர்வு கோரியும் பொதுமக்களிடமிருந்து 187 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்திலிருந்து 17 மனுக்களும் பெறப்பட்டு  தொடர்புடைய துறைகளின் நடவடிக்கைகளுக்கு  பரிந்துரைக்கப்பட்டன.
  போதை மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளுக்கிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 7 பேருக்கும், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 9 பேருக்கும், ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 9 பேருக்கும் பரிசுகள்
  வழங்கப்பட்டன.
  மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி, தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோ. தேன்மொழி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai