Enable Javscript for better performance
வடிகால் கட்டும் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் கழிவுநீர் வடிகால் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வர்த்தகர்கள் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தனர்.
    சீர்காழி நகராட்சி 9-ஆவது வார்டுக்குள்பட்ட பிடாரி வடக்கு வீதியில் ரூ. 4 லட்சம் செலவில் கழிவுநீர் வடிகால் கட்ட நகராட்சி நிர்வாகம் மூலம் தீர்மானிக்கப்பட்டு, அந்தப் பணி தனியாரிடம் ஒப்பந்தம் விடப்பட்டது.
    மேலும், வடிகால் அமைக்க சாலையில் ஜல்லிக்கற்கள், மணல் ஆகியவையும் கொட்டப்பட்டு  பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், கடைகளின் முன்பு பள்ளம் தோண்டப்பட்டு, 20 நாள்களுக்கு மேல் ஆகியும் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வர்த்தகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இந்நிலையில், சீர்காழி நகர வர்த்தக சங்கச் செயலர் ராஜ்மோகன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் நகராட்சி அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை திரண்டு வந்தனர். பின்னர், நகராட்சி ஆணையரைச் சந்தித்து கழிவுநீர் வடிகால் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai