சுடச்சுட

    

    "விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்துக்கு ரூ. 5,500 கோடி நிதி ஒதுக்கீடு'

    By DIN  |   Published on : 20th September 2016 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் பசி, பஞ்சத்தைத் தவிர்க்கும் வகையில், விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்துக்கு அரசு ரூ. 5,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.
    கீழ்வேளூர் ஒன்றியம், கோகூர், திருமருகல் ஒன்றியம்,  கிடாமங்கலம்-1, கிடாமங்கலம்-2, நெய்குப்பை, ஏர்வாடி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள  புதிய நியாயவிலைக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:
     தமிழக அரசின் திட்டங்களில் கடைக்கோடி மக்களும் பயன்பெற வேண்டும் என்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை எனச் செயல்படும் முதல்வர், தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை உச்சநீதிமன்ற சட்டப்போராட்டம் மூலம் நிலைநாட்டியுள்ளார்.
    தமிழக அரசு செயல்படுத்தும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் மூலம், பசி, பஞ்சம் இல்லாத மாநிலமாக உள்ளது தமிழகம். இத்திட்ட செயலாக்கத்துக்கு ரூ. 5,500 கோடி நிதி ஒதுக்கீடு அளித்து அரசு உயர் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன். மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்தார். திருமருகல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மைதிலி ராஜேஷ்குமார், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai