Enable Javscript for better performance
அறக்கட்டளை தலைவரிடம் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அறக்கட்டளை தலைவரிடம் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த மூவர் கைது

    By DIN  |   Published on : 21st September 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த தனியார் கல்வி அறக்கட்டளை தலைவரிடம் ரூ. 2 கோடி கேட்டு, மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
    சீர்காழி சேந்தங்குடியைச் சேர்ந்தவர் ராமர். இவர், சீர்காழியில் பால்சாமி நாடார் கல்வி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். மேலும் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார்.
    கடந்த ஜூன் 6 ஆம் தேதி இவரது செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ரூ. 2 கோடி தர வேண்டும், இல்லாவிட்டால் உங்கள் மீது அவதூறு பரப்பிவிடுவோம் என மிரட்டல் விடுத்தனராம்.
    மேலும், ராமரின் செல்லிடப்பேசியில் உள்ள வாட்ஸ்அப்-க்கும் மிரட்டல் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர். ஜூலை 18 ஆம் தேதியும் இதுபோன்று பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து ராமர், தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணை குறிப்பிட்டு, ஜூலை 23 ஆம் தேதி சீர்காழி டிஎஸ்பி வெங்கடேசனிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் அழகுதுரை மற்றும் போலீஸார் சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன், மிரட்டல் வந்த செல்லிடப்பேசி எண்ணை கண்காணித்து வந்தனர்.
    விசாரணையில், கொள்ளிடம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த அ. செல்வமணி (45), அனுமந்தபுரம் கா. செந்தமிழன் (23), கொள்ளிடம் புலீசுவர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த புவனேஸ்வரன் ஆகிய மூவரும் ராமரிடம் ரூ. 2 கோடி கேட்டு, தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, அவர்கள் மூவரையும் சீர்காழி போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai