Enable Javscript for better performance
ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: 62 ஓய்வூதியர்களுக்கு குடும்பப் பாதுகாப்பு நிதி- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: 62 ஓய்வூதியர்களுக்கு குடும்பப் பாதுகாப்பு நிதி

    By DIN  |   Published on : 21st September 2016 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகையில் நடைபெற்ற ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டத்தில், 62 ஓய்வூதியர்களுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பில் குடும்பப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு நிதி காசோலைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
    மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி தலைமை வகித்தார். ஓய்வூதிய இயக்குநரக இயக்குநர் நசீர் ஹூசைன் முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை, நகராட்சி, பேரூராட்சி, உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், கருவூலம், சுகாதாரம், வருவாய்த் துறை உள்பட 14 அரசுத் துறைகளின் அலுவலர்கள் பங்கேற்றனர்.
    பல்வேறு அரசுத் துறைகளிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் 52 மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டு, தீர்வு நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்பட்டன.
    கூட்டத்தின்போது வழங்கப்பட்ட 30 மனுக்கள் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
    இதில், 62 ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் பாதுகாப்பு, குடும்பப் பாதுகாப்பு நிதியாக ரூ. 35 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
    ஓய்வூதிய துணை இயக்குநர் சி. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தி. சந்தானகிருஷ்ணன், மாவட்ட கருவூல அலுவலர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai