சுடச்சுட

    

    நாகை மாவட்டம், தரங்கம்பாடி  அருகே கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
    தரங்கம்பாடி வட்டம், அப்புராசபுத்தூர் வாய்க்காங்கரை தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் தீபிகா (18). இவர், பூம்புகார் கல்லூரியில் தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் இறந்து விட்டார். இந்நிலையில் தீபிகாவும், அவரது தாய் சுமதியும் (40) தனியே வசித்து வந்தனர். திங்கள்கிழமை இரவு தீபிகா தனது செல்லிடப்பேசியில் பேசியபடி, அருகில் உள்ள வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றுள்ளார்.
    நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால்,  தீபிகாவின் செல்லிடப்பேசி எண்ணை  சுமதி தொடர்பு கொண்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய உள்ளூர் நபர் ஒருவர், அந்த செல்லிடப்பேசி சாலையில் கிடந்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து, சுமதி மற்றும் அக்கம் பக்கத்தவர்கள் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியும் தீபிகாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
    இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ராஜேந்திரன் வாய்க்கால் பகுதியில், மண்வெட்டி பிடியால் தலையில் தாக்கப்பட்டு தீபிகா கொலை செய்யப்பட்டுக் கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.
    தகவலறிந்த பொறையாறு போலீஸார் அங்கு சென்று,  தீபிகாவின் சடலத்தைக் கைப்பற்றி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சடலத்துக்கு அருகே கிடந்த மண்வெட்டி பிடியையும் போலீஸார் கைப்பற்றி, தடய அறிவியல் சோதனைக்கு உள்படுத்தினர். நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை, நிகழ்விடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து பொறையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து
    விசாரிக்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai