Enable Javscript for better performance
நாகூர் தர்கா பகுதிகளில் தூய்மைப் பணி- Dinamani

சுடச்சுட

    

    தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை, நாகூர் - நாகப்பட்டினம் அரிமா சங்கம், நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் நாகூர் தர்கா பகுதிகளில் தூய்மைப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இப்பணியை, நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் எஸ்.ஏ. ஷேக் ஹசன் சாகிபு, மாவட்ட சுற்றுலா வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, நகராட்சி ஆணையர் ஜான்சன், நாகூர் - நாகப்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் மீராஹூசைன், செயலர் செல்வன்  ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
    100 சுகாதாரப் பணியாளர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், தன்னார்வ அமைப்பினர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
    நாகூர் தர்கா, சில்லடி தர்கா மற்றும் சுற்றுப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai