சுடச்சுட

    

    விஏஓ தாக்கப்பட்ட விவகாரம்: சக அலுவலர்கள் தொடர் விடுப்பெடுக்க முடிவு

    By DIN  |   Published on : 21st September 2016 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேதாரண்யம் அருகே சட்ட விரோதமாக மணல் வெட்டியதைத் தடுக்கச் சென்ற விஏஓ மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்யாவிட்டால், சக கிராம நிர்வாக அலுவலர்களும் தொடர் விடுப்பில் சென்று  போராட்டம் நடத்த சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    வேதாரண்யத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக  அலுவலர்கள் சங்கக் கூட்டம் அதன் வட்டத் தலைவர் சி. ரெங்கநாதன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
    சங்கச் செயலர் மங்களதாஸ், பொருளாளர்  கண்ணன், மாவட்டத் தலைவர் ராசேந்திரன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    கூட்டத்தில், மருதூர் வடக்கு கிராம நிர்வாக  அலுவலர் கே. அருண்குமார் (26), அப்பகுதியில்  செப். 8-ஆம் தேதி சட்ட விரோதமாக  மண்ணை வெட்டி ஏற்றியதைத் தடுக்கச் சென்றபோது தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தவும், குற்றவாளியை கைது செய்யாவிட்டால் அனைத்து  அலுவலர்களும் தொடர் விடுப்பில் செல்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai