Enable Javscript for better performance
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என  வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விடுதலைச்  சிறுத்தைகள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின்  நாகை மாவட்ட முன்னாள் செயலரும்,  வழக்குரைஞருமான வேலு. குபேந்திரன் தலைமை வகித்தார்.
    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 15-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai