சுடச்சுட

    

    ஊரக வேலை உறுதித் திட்ட கூலித் தொகை வழங்கக் கோரி மறியல்

    By DIN  |   Published on : 22nd September 2016 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக வழங்கப்படாத கூலித் தொகையை வழங்கக் கோரி, புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
    வேட்டைக்காரனிருப்பு கடைவீதியில் நடைபெற்ற மறியலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலர் நாகராஜன் தலைமை வகித்தார். கட்சியின் கீழ்வேளூர் ஒன்றியச் செயலர் டி. செல்வம் முன்னிலை வகித்தார்.
    கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம், வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே  வழங்க வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் ஏடிஎம் அட்டை வழங்கி, அதற்கான பணம் எடுக்கும் மையத்தை வேட்டைக்காரனிருப்பில் அமைக்க வேண்டும், குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியலில்
    ஈடுபட்டனர்.
    தகவலறிந்த வேதாரண்யம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜி. பாலு, கீழ்வேளூர் வட்டாட்சியர் அமுதவிஜயரெங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிமணி உள்ளிட்டோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால், வேதாரண்யம் - நாகை சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai