சுடச்சுட

    

    நாகை அருகே செலவுக்கு பணம் தராததால் தாயை வெட்டிக் கொன்ற மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.
    நாகை அருகேயுள்ள வண்டலூர், தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் குப்பன் மனைவி சிவபாக்கியம் (70). இவரது மகன் ஜீவானந்தம். மரம் வெட்டும் தொழிலாளி. புதன்கிழமை காலை சிவபாக்கியத்திடம் ஜீவானந்தம் செலவுக்கு பணம் கேட்டாராம்.
    பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ஜீவானந்தம், அரிவாளால் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே சிவபாக்கியம் உயிரிழந்தார். தகவலறிந்த வேளாங்கண்ணி போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
    வண்டலூர் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் அளித்த புகாரின்பேரில், வேளாங்கண்ணி போலீஸார் வழக்குப் பதிந்து ஜீவானந்தத்தை தேடி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai