சுடச்சுட

    

    நாகை அருகே தம்பியை கொன்றவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நாகை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
    நாகை அருகேயுள்ள பரங்கிநல்லூர், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன்கள் சக்திவேல் (26), சந்தானக்குமார் (23).
    சக்திவேலும், அவரது மனைவி பிரியாவும் பிரிந்து வாழ்ந்தனர். தனது மனைவி பிரியாவை சேர்த்து வைக்கக் கோரி, தாய் அம்மாபொன்னுவிடம் சக்திவேல் அடிக்கடி தகராறு செய்வாராம்.
    கடந்த 2013, மே 12 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சக்திவேல், தனது தாய் அம்மாபொன்னுவை குத்த முயன்றபோது, குறுக்கே வந்த சந்தானக்குமார் மீது கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சந்தானக்குமார் நிகழ்விடத்திலேயே இறந்தார். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனர். இந்த வழக்கு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    விசாரணையின் முடிவில், சக்திவேலுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai