சுடச்சுட

    

    நாகையில் கலங்கரை விளக்க தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
    மீனவர்களின் மீன்பிடிப்புக்கும், கப்பல் பயணம் செய்வோருக்கும் உதவுவதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கலங்கரை விளக்க சட்டமானது 1927 செப். 21 ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. இது இந்தியா முழுவதும் கலங்கரை விளக்க தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
    நாகை கலங்கரை விளக்கத்தில் இதற்கான விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் நாகையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள், கடலோரப் போலீஸார், துறைமுக தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
    நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும், கலங்கரை விளக்கம் தொடர்பான தகவல்களையும், அது எவ்வாறு மீனவர்களுக்கும், கடல் பயணத்துக்கும் உறுதுணையாக உள்ளது என்பதையும் நாகை கலங்கரை விளக்க உதவிப் பொறியாளர் வி. சின்னசாமி விளக்கிக் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai