சுடச்சுட

  

  நாகை அரசு கலைக் கல்லூரியில் நாகை சட்டப்பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
  நாகையில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலைக் கல்லூரி கடந்த 4 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்குச் சொந்தக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தற்போது, இக்கல்லூரி வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.
  நாகை சட்டப்பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி, இக்கல்லூரியை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் கல்லூரிக்கான அடிப்படை, அவசர தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
  பின்னர், கல்லூரியின் நூலகம், கணினி அறை ஆகியன ஒரு வார காலத்துக்குள் சீரமைத்துப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும், புதிய கரும்பலகைகள், மின் விசிறிகள், கழிப்பறை வசதிகளும் ஒருவார காலத்துக்குள் நிறைவேற்றப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai