சுடச்சுட

  

  நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்ட கைதி புதன்கிழமை மாலை தப்பி ஓடினார்.
  நாகப்பட்டினம், 2 ஆம் கடற்கரைச் சாலையில் வசிப்பவர் அபுசலீம் மகன் ஹசன் சாகுல் ஹமீது (35). இவர் மீது கீழ்வேளூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் செயின் பறிப்பு, நகை திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 2014 அக். 6 ஆம் தேதி கீழ்வேளூரில் நடைபெற்ற செயின் பறிப்பு தொடர்பாக ஹசன் சாகுல் ஹமீது கைது செய்யப்பட்டு, நாகை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நாகை நீதிமன்றத்துக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக நாகை நீதிமன்றத்துக்கு ஹசன் சாகுல் ஹமீது அழைத்து வரப்பட்டார். பின்னர், விசாரணை முடிந்து வெளியே வந்தபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai