சுடச்சுட

  

  மாணவர்களுக்கு சமூக அக்கறை அவசியம் தேவை என்று சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டி. ஆனந்த் கூறினார்.
  வேதாரண்யத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி  கல்லூரியில் இளம் தொழில்முனைவோருக்கான பயிற்சி  முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் ஏ. உத்திராபதி தலைமை வகித்தார்.
  முகாம் தொடக்க நிகழ்ச்சியில், டி. ஆனந்த் பங்கேற்று "திருப்புமுனை' என்ற தலைப்பில் பேசியது:
  அனைத்து பெற்றோர்களுமே குழந்தைகளின் நல்ல எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு தான் செயல்படுகிறார்கள். இதற்காக அவர்கள் கஷ்டப்படுவதோடு, சில நேரங்களில் அவமானங்களைக்கூட தாங்கிக் கொள்கிறார்கள். இதில் தாய், தந்தை இருவரும் நிகர்நிலை என்றாலும், தான் பார்க்காத உலகத்தை தோளில் சுமந்து காட்ட நினைப்பவர்  தந்தை. படிக்கும் பருவத்தில் தங்களது பெற்றோரை மதிக்கும்  பண்பை மாணவர்கள், மனதில் நிறுத்தி செயல்பட்டால் அது சமூக வளர்ச்சிக்கும் உதவும்.
  சமகால தலைமுறையினராகிய நாம், அடுத்து வரும்  தலைமுறைக்கு ஆரோக்கியமான வாழ்வை, சரியான நெறிகளை சொல்லித் தரவில்லை. மாறாக, உணவு என்ற போர்வையில் விஷத்தை அளிக்கிறோம்.
  இவை மாற்றப்பட வேண்டுமெனில் மாணவர்களிடையே சமூக அக்கறை அவசியம் என்றார்.
  முகாமில், பேராசிரியர்கள் பி. பிரபாகரன், ஆர். புயலரசு,   ஆர். ராஜேஷ், ராம்குமார், ஏ. தாமரைசெல்வி, இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai