Enable Javscript for better performance
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது- Dinamani

சுடச்சுட

    

    உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது

    By DIN  |   Published on : 23rd September 2016 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மாட்டோம் என கர்நாடக அரசு தெரிவித்திருப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவருமான கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
    நாகை அருகே சிக்கலில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
    4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தமிழகத்தின் அனைத்து விவசாயிகள் சங்கங்கள், அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. இந்தத் தீர்ப்பை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.
    தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த மாட்டோம் என கர்நாடக அரசு தெரிவித்திருப்பது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இதனால், தேசத்தில் கடுமையான எதிர் விளைவுகள் ஏற்படும்.
    உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி, நியாயம், நேர்மை, கடமை ஆகியவற்றுக்கு கர்நாடக அரசு மதிப்பளித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அனைவரின் ஒருமித்த ஆதரவுடன் செயலாற்ற வேண்டும் என்றார்.
    செய்தியாளர் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி. முருகையன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் நாகைமாலி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி. சுப்பிரமணியன், எம். காத்தமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai