சுடச்சுட

    

    ஊரக வேலை உறுதித் திட்ட கூலியை வழங்கக் கோரி சாலை மறியல்

    By DIN  |   Published on : 23rd September 2016 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கான கூலித் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி, மயிலாடுதுறை அருகேயுள்ள மூவலூரில் வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
    மயிலாடுதுறை வட்டம், மூவலூர் மற்றும் சித்தர்க்காடு ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கூலித் தொகை கடந்த சில மாதங்களாக வழங்கப்படவில்லையாம்.
    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர்கள் என். பூமிநாதன் (மூவலூர்), கே.ஜி. மார்க்ஸ் (மகாதானபுரம்) ஆகியோர் தலைமையில், மூவலூர் ஊராட்சி மன்றம் முன்பு விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்தனர்.
    ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கான கூலித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு அறிவித்த கூலி ரூ. 203-ஐ வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசெல்வி, மண்டல துணை வட்டாட்சியர் சபிதாதேவி மற்றும் போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் எம். மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஸ்டாலின், வி. சிங்காரவேலு, மாவட்டக் குழு உறுப்பினர் து. கணேசன், வட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். கோவிந்தசாமி, சி. மேகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai