சுடச்சுட

    

    கல்லூரி மாணவியை அடித்துக் கொன்ற பல்கலைக்கழக மாணவர் உள்பட 2 கைது

    By DIN  |   Published on : 23rd September 2016 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே கல்லூரி மாணவி ஒருவர், திங்கள்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அண்ணாமலை பல்கலைக்கழக முதுநிலை மாணவர் உள்பட 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    தரங்கம்பாடி வட்டம், அப்பராசபுத்தூர் வாய்க்காங்கரை தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் தீபிகா (18). இவர், பூம்புகார் கல்லூரியில் தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.
    திங்கள்கிழமை இரவு தீபிகா தனது செல்லிடப்பேசியில் பேசியபடி, அருகில் உள்ள வீட்டுக்குச் சென்று வருவதாக தனது தாய் சுமதியிடம் கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை.
    இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ராஜேந்திரன் வாய்க்கால் பகுதியில், மண்வெட்டி பிடியால் தலையில் தாக்கப்பட்டு தீபிகா கொலை செய்யப்பட்டுக் கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை, நிகழ்விடத்தைப் பார்வையிட்டு  உடனடி விசாரணை, நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். தீபிகா கொலை தொடர்பாக, பொறையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    சந்தேகத்தின்பேரில், நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகையைச் சேர்ந்த அரசனிடம் (21) போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
    விசாரணையில், தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பயின்று வரும் அரசன், கடந்த ஆண்டு பூம்புகார் கல்லூரியில் பயின்றபோது, அவருக்கும், தீபிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. அண்மையில் தீபிகாவுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற்றதை அடுத்து, ஆத்திரமடைந்த அரசன், தீபிகாவை அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், இந்தக் கொலையில் அரசனின் நண்பரும், நாகை மாவட்டம், தென்னலக்குடியைச் சேர்ந்தவருமான ரா. ராஜ்மோகன், அரசனுக்கு உதவியிருந்தது தெரியவந்தது.
    இதையடுத்து, அரசன், ராஜ்மோகன் ஆகிய இருவரையும் பொறையாறு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai