Enable Javscript for better performance
தீ விபத்து: எம்.எல்.ஏ நிவாரணம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் வியாழக்கிழமை வழங்கினார்.
    நாகை மாவட்டம், செம்பனார்கோயில் அருகேயுள்ள கருவாழக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். அண்மையில் சதீஷின் குடிசை வீடு தீவிபத்தில் பாதிக்கப்பட்டது. வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
    தகவலறிந்த பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ், சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர், தமிழக அரசு சார்பில் ரூ. 5,000 மற்றும் அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.
    அப்போது ஒன்றியக்குழுத் தலைவர் ஜனார்த்தனம், வருவாய்த்துறையினர் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai