சுடச்சுட

  

  நாகை மாவட்டத்தில் 50,778 விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி: அமைச்சர் ஓ.எஸ். மணியன் தகவல்

  By DIN  |   Published on : 23rd September 2016 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் 50,778 பேரின் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.
  நாகை மாவட்டம், கீழ்வேளூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் அவர் மேலும் பேசியது:
  தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. இதன்படி, நாகை மாவட்டத்தில் 50,778 விவசாயிகளுக்கு ரூ. 144.42 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ததுடன், ரூ. 6,000 கோடி மதிப்பில் விவசாயிகளுக்குப் புதிய கடன் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
  தமிழக முதல்வர் மேற்கொண்ட சட்டப்போராட்டம்  காரணமாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவை வெளியிட்டுள்ளது என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன். முன்னதாக, கடன் தள்ளுபடி பெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களும், லிபர்டி சூரியகாந்தி குழுவுக்கு டாம்கோ கடனாக ரூ. 2.85 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டன. ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ் (பூம்புகார்), பி.வி. பாரதி (சீர்காழி), வீ. ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), மாநில கூட்டுறவு வங்கித் துணைத் தலைவர் எஸ். ஆசைமணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஏ.கே. சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai