சுடச்சுட

  

  வரும் உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை நகரம், ஒன்றியப் பகுதிகளில் போட்டியிட விரும்பும் பாஜகவினரிடமிருந்து அக்கட்சி சார்பில் வியாழக்கிழமை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
  பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் தங்கள் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.
  இதையொட்டி, நகர பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி. வெங்கடேசன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் மோடி. கண்ணன், மயிலாடுதுறை ஒன்றியத் தலைவர் பொன். சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மயிலாடுதுறை நகராட்சி உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், பேரூராட்சித் தலைவர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிட விரும்பும் 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
  கட்சியின் நாகை மாவட்ட பொதுச் செயலர் நாஞ்சில் ஆர். பாலு, அமைப்புச் செயலர் ராம. செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் யூ. பாலு, மாவட்ட துணைத் தலைவர்கள் ராம. எழிலரசன், எம்.ஜி. பிரபாவதி, மண்டல பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், வர்த்தகர் அணி மாவட்டத் தலைவர் ஆர். ஜெயக்குமார், இளைஞர் அணி நாகை மாவட்டத் தலைவர் கே. வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai