சுடச்சுட

    

    திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலக் கழகம் (டெக்ஸ்கோ) சார்பில், முன்னாள் படைவீரர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக ஓட்டுநர் பயிற்சி, செல்லிடப்பேசி சர்வீஸ் பயிற்சி ஆகியன நடத்தப்படவுள்ளது.
    இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள், நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai